மேலும் அறிய

Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?

சென்னையில் மாருதி விக்டோரிஸின் ஆன்-ரோடு ஆரம்ப விலை சுமார் 13.38 லட்சம் ரூபாய் ஆகும். அதே சமயம், டாப்-ஆஃப்-லைன் ஹைப்ரிட் மாடலின் விலை 25.28 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

நாட்டில், புதிய பாணியிலான கேபின் வசதி மற்றும் சக்திவாய்ந்த மைலேஜை வழங்கும் காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு தற்போது பெரும் தேவை உள்ளது. இந்தப் போட்டியில், மாருதி சுசூகியிடமிருந்து சந்தையில் நுழைந்துள்ள மாருதி விக்டோரிஸ், கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஸ்டைலான தோற்றம், 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல்-2 ADAS போன்ற உயர்நிலை அம்சங்களுடன், இந்த எஸ்யூவி நடுத்தரப் பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா, டாடா சியரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற போட்டியாளர்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்கிறது. 

நீங்கள் ஒரு புதிய விக்டோரிஸ் காரை வாங்க விரும்பினால், அதன் ஆன்-ரோடு விலை தெரிந்துகொள்வதோடு, அந்த காரை லோனில் வாங்கினால், முன்பணம் எவ்வளவு செலுத்த வேண்டும், மாதாந்திர EMI எவ்வளவு வரும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

மாருதி விக்டோரிஸ் ஆன்ரோடு விலை

மாருதி விக்டோரிஸ் இந்திய சந்தையில் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.10.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்டின் விலை ரூ.19.99 லட்சம் வரை உள்ளது. இருப்பினும், வாகனத்தைப் பதிவு செய்யும்போது போக்குவரத்துத் துறையால் விதிக்கப்படும் 12 முதல் 14 சதவிகிதம் வரையிலான RTO ஆயுள் வரி, விரிவான காப்பீடு, TCS மற்றும் விருப்பத் துணைக்கருவிகளைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மாறுபடும்.

அடிப்படை வேரியன்ட்டான LXI பெட்ரோல் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.50 லட்சம் ஆகும். அதே சமயம், சென்னையில் அதன் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.13.38 லட்சமாக உள்ளது. நடுத்தர வேரியன்ட்களான VXI, GSI பெட்ரோல் மற்றும் CNG ஆகியவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.80 லட்சம் முதல் ரூ.12.81 லட்சம் வரை உள்ளது. சென்னையில் அவற்றின் ஆன்-ரோடு விலைகள் ரூ.15.01 லட்சம் முதல் ரூ.16.26 லட்சம் வரை உள்ளன. டாப் வேரியன்ட்களான Strong Hybrid மற்றும் AWD வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.54 லட்சம் முதல் ரூ.19.46 லட்சம் வரை உள்ளது.

அடிப்படை மாடல் LXI மேனுவல் முன்பணம்-EMI கணக்கீடுகள்

குறைந்த பட்ஜெட்டில் ஒரு SUV காரை அனுபவிக்க விரும்புவோருக்கு, மாருதி விக்டோரிஸ் LXI 1.5L பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் ஒரு சிறந்த தேர்வாகும். சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.13,00,775 ஆகும். குறைந்தபட்ச முன்பணம் இரண்டு லட்சம் ரூபாய். அவ்வாறு செய்தால், நீங்கள் வங்கியிலிருந்து ரூ.11,00,775-ஐயும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் சுமார் 9 சதவீதம் ஆகும். இந்த வட்டி விகிதம் வங்கிகள் மற்றும் உங்கள் சிபில் ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும். இந்த கணக்கீட்டின்படி, எந்தெந்த மாதங்களில் நீங்கள் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று பார்ப்போம். 

இந்தத் தொகையை மூன்று வருட காலத்திற்கு கடனாக எடுத்தால், நீங்கள் மாதம் ரூ.35,004 செலுத்த வேண்டும். இதே தொகையை ஐந்து வருட காலத்திற்கு எடுத்தால், நீங்கள் மாதம் ரூ.22,850 செலுத்த வேண்டும். இதே தொகையை ஏழு வருட காலத்திற்கு எடுத்தால், நீங்கள் மாதம் ரூ.17,710 மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.

நகரப் பயணங்களுக்கு ஆட்டோமேட்டிக் அல்லது குறைந்த இயக்கச் செலவை விரும்புவோருக்கு, VXI மற்றும் GXI ஆகிய நடுத்தர CNG மாடல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இதன் ஆன்-ரோடு விலை ரூ.15,82,939 ஆகும். இதற்கு, சுமார் ரூ.2.5 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை வங்கியில் கடனாக பெற்று, ஐந்து ஆண்டுகளுக்கு 9 சதவீத வட்டியில் பெற்றால், மாதத் தவணை ரூ.27,670 ஆக இருக்கும். இதே கடனை ஏழு ஆண்டுகளுக்குப் பெற்றால், மாதத் தவணை ரூ.21,446 ஆக இருக்கும்.

நீங்கள் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்தால், உங்களுக்கு பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, காற்றோட்ட இருக்கைகள், லெவல்-2 ADAS பாதுகாப்பு மற்றும் லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ் ஆகியவை கிடைக்கும். இந்த செக்மென்ட்டில் ZXI பிளஸ் ஸ்ட்ராங் ஹைப்ரிட்டின் ஆன்-ரோடு விலை ரூ.24,65,010 ஆகும். இதற்காக, நீங்கள் ரூ.3.5 லட்சம் முன்பணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை 9 சதவீத வட்டியில் வங்கிக் கடனாகப் பெற வேண்டும். நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிக் கடன் எடுத்தால், மாதத்திற்கு ரூ.43,904 செலுத்த வேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு எடுத்தால், நீங்கள் ரூ.34,029 செலுத்த வேண்டும்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Bajaj: இனிமே நாங்கதான்... முதல் ஆஃப் ரோட் பைக்கை இறக்கப்போகும் பஜாஜ்! வெயிட்டிங் மாமே..!
Bajaj: இனிமே நாங்கதான்... முதல் ஆஃப் ரோட் பைக்கை இறக்கப்போகும் பஜாஜ்! வெயிட்டிங் மாமே..!
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
ஒரே சார்ஜில் 1338 கி.மீ. - கின்னஸ் உலக சாதனை படைத்து மாஸ் காட்டிய EV - எந்த கார் தெரியுமா?
ஒரே சார்ஜில் 1338 கி.மீ. - கின்னஸ் உலக சாதனை படைத்து மாஸ் காட்டிய EV - எந்த கார் தெரியுமா?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Embed widget