மேலும் அறிய

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!

மாணவரின் தொழில்நுட்பத் திறமையைக் கண்டு வியந்த ஐஐடி கான்பூர் நிர்வாகம், அவர் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, அவருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது.

புகழ்பெற்ற ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்தில் தமக்குச் சேர்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்திலும் விரக்தியிலும், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே மாணவர் ஒருவர் ஹேக் செய்த சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், அந்த மாணவரின் தொழில்நுட்பத் திறமையைக் கண்டு வியந்த ஐஐடி கான்பூர் நிர்வாகம், அவர் மீது கடுமையான காவல் துறை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, அவருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது. இந்தச் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கிடைக்காத சேர்க்கை வாய்ப்பு

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுக் கல்வி நிறுவனமாக ஐஐடி கான்பூர் திகழ்கிறது. அந்த வகையில், நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர் ஒருவருக்கு அங்கு படிப்பதற்கான சேர்க்கை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான அந்த மாணவர், தனது கணினித் திறனைப் பயன்படுத்தி ஐஐடி கான்பூர் இணையதளத்தின் அதிநவீனப் பாதுகாப்பு வளையங்களை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த ஐஐடி கான்பூர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள், உடனடியாகச் செயல்பட்டு இணையதளத்தை மீட்டனர். பின்னர், சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் உதவியுடன் ஹேக் செய்த நபரின் ஐபி முகவரியைக் கண்டறிந்து, அவர் சேர்க்கை கிடைக்காத விரக்தியில் இருந்த ஒரு மாணவர் என்பதை உறுதி செய்தனர்.

மனிதாபிமான அணுகுமுறை

பொதுவாக இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். ஆனால், ஐஐடி கான்பூர் நிர்வாகம் இந்த விவகாரத்தில் சற்று வித்தியாசமான, மனிதாபிமான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.

அந்த மாணவர் செய்த செயல் சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அவர் பயன்படுத்திய ஹேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அவரது அபாரமான கணினி அறிவைக் கண்டு நிர்வாகத்தினர் ஆச்சரியமடைந்தனர். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையே ஹேக் செய்யும் அளவுக்குத் திறமை வாய்ந்த ஒரு மாணவரின் எதிர்காலத்தை, ஒரு வழக்கின் மூலம் இருட்டுக்குள் தள்ள நிர்வாகம் விரும்பவில்லை.

எத்திக்கல் ஹேக்கர்

எனவே, அவரை நேரில் அழைத்து அறிவுரை வழங்கவும், அவரது அசாத்தியமான சைபர் பாதுகாப்புத் திறனை நல்வழியில் பயன்படுத்தத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் ஐஐடி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. தவறான வழியில் சென்ற அந்த மாணவரின் திறமையை அங்கீகரித்து, அவரை ஒரு சிறந்த எத்திக்கல் ஹேக்கராக மாற்றுவதற்கான பயிற்சிகளையோ அல்லது வேறு வகையிலான வாய்ப்புகளையோ வழங்கி, அவருக்கு இரண்டாவது வாய்ப்பளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கு பதிலாகத் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்கும் ஐஐடி கான்பூர் நிர்வாகத்தின் இந்த முற்போக்கான முடிவு, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மாணவரின் எதிர்கால நலன் கருதி அவரது அடையாளம் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget