மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்.." மதுரையில் பா.ஜ.க. ஒட்டிய போஸ்டர்..! குவியும் கண்டனம்..!
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
![The Communist Party condemns the poster attached by the BJP to the extent that we have nothing to say.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/2e90596f91c15b420688b19da0e0ebd61695114070112184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்ச்சை போஸ்டர்
சுவரொட்டியை வெளியிட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.
ஜெயிலர் பட வசனம்:
மதுரையின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க., சார்பில் தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர்களில் ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு தான் என்ற வசனத்தோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார். இந்த சுவரொட்டிகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
"ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்" - பாஜகவினர் ஒட்டிய சுவரொட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
— arunchinna (@arunreporter92) September 19, 2023
சுவரொட்டியை வெளியிட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என cpi(m) கட்சி அறிக்கை.. pic.twitter.com/yABK6Te4u4
அரசியல் தளத்தில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை முன்னிறுத்துவதோடு, அதற்காக மதுரை மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு வரும் சூழலில் அதை சீர்குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் வகையிலும் இந்த சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
மேலும் மதுரை மாவட்ட செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர்களுக்கு செப்., 29 வரை நீதிமன்ற காவல்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/2e90596f91c15b420688b19da0e0ebd61695114070112184_original.jpeg)
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட நபர்கள் மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் இத்தகைய வன்முறையாளர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தி ஜனநாயகம் காக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: மீனாட்சியம்மன் கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் கொழுக்கட்டை படைத்து சிறப்பு வழிபாடு
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vinayagar Chaturthi 2023: பிள்ளையார்பட்டி திருத்தேரோட்ட விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு
-
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion