TN Fishermen Arrest: இதுக்கு இல்லையா ஒரு எண்டு..! மீண்டும் மீனவர்கள் 18 பேர் கைது, இலங்கை கடற்படை அடாவடி
TN Fishermen Arrest: காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Fishermen Arrest: காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர்கள் காரைக்காலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களை காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் இலங்கை கடற்படை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழக மற்றும் இந்திய மீனவர்களுக்கு எதிரான, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது சாத்தியமானபாடில்லை. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினும் ஒவ்வொரு முறையும் கடிதம் எழுதி அழுத்தம் தந்து வருகிறார். ஆனால், அதற்கான பலன்கள் கிடைக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்குறியாகவே தொடர்கிறது.