’’எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதல்வர் வேலை பார்த்து வருகிறார்’’- ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பாராட்டு
"ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்'’
ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம் என மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.இந்நிலையில் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறுக பேசி வருகிறார். இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், " மனுதாரர் அரசியல் தலைவர்களை அவதூறாக விமர்சிம்ம மாட்டேன் என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த நிலையில் முதல்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து உள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதியை மீறும் வகையில் அவர் செயல்பட்டதால் அவரது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு உறுதியளித்த பின்னர் சாட்டை துரை முருகன் மீது 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "ஒரு முதல்வர், அவரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே தமிழக முதல்வர் வேலை பார்த்து வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம் என குறிப்பிட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் பேசிய விபரங்களை வழங்குமாறு குறிப்பிட்டார். அதற்கு அரசு தரப்பில் CDயாக தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறும் வகையில் செயல்பட்டிருந்தால், அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்