மேலும் அறிய
Advertisement
Keezhadi: கீழடி 9ம் கட்ட அகழாய்வு - காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்
கீழடியில் முதலில் பணிகள் தொடங்கப்படுகிறது. அதன்பின் கொந்தகை , அகரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கீழடியில் 9ம் கட்ட அகழாய்வை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் வீரணன் என்பவரது இரண்டு ஏக்கர் நிலத்தில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில் இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
Tamil Nadu Chief Minister M. K. Stalin inaugurated the 9th phase of excavation work in keezhadi through a video conference.
— arunchinna (@arunreporter92) April 6, 2023
Further reports to follow @abpnadu#keezhadi | #sivagangai | @CMOTamilnadu | @LPRABHAKARANPR3 @ptrmadurai @HariharanSuloc1 | @ikamalhaasan | @jeyahirthi pic.twitter.com/DeXmiVMmvD
வழக்கமாக பணிகளானது ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெறும், இந்தாண்டு அருங்காட்சியகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தும் பணி நடந்து வந்ததால் பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை முழுவீச்சில் நடத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. வழக்கமா பத்து குழிகள் மட்டும் தோண்டப்படும், இந்தாண்டு கூடுதலாக குழிகள் தோண்ட தொல்லியல் துறை திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் உள்ளனர். அகழாய்வு பணிக்காக பத்து அடி நீள அகலத்தில் குழிகள் தோண்டப்படும், அதில் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்ப ஆழம் மாறுபடும்.,
இந்தாண்டு கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளனர். 5ம் கட்ட அகழாய்வின் போது மூடிய நிலையில் உள்ள செங்கல் பாசன கால்வாய் கண்டறியப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி 6, 7,8ம் கட்டங்களில் தேடப்பட்டது கடைசி வரை கிடைக்கவில்லை. தற்போது வீரணன் நிலம் 5ம் கட்ட மூடிய நிலை பாசன கால்வாயின் கிழக்குபுறம் அமைந்துள்ளது. எனவே அதனுடைய தொடர்ச்சி இங்கு இருக்கலாம் என கருதப்படுகிறது. 8ம் கட்ட அகழாய்வில் இருவண்ண பானைகள், ஆட்ட காய்கள், தங்க காது குத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
9ம் கட்ட அகழாய்விலும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அகழாய்வு பணிகள் தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம், இணை இயக்குநர் ரமேஷ், தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்பொழுது கீழடியில் முதலில் பணிகள் தொடங்கப்படுகிறது. அதன்பின் கொந்தகை , அகரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கீழடி புனை மெய்யாக்க செயலி என்ற ஆப் அறிமுக படுத்த பட்டுள்ளது இந்த ஆப்ஐ டவுன்டோல் செய்தல் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை மொபைல் போனில் காணலாம் தமிழக தொல்லியல் துறை சார்பில் அறிமுகப்படுத்தபடும். இந்த செயலி இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: திருமணமான ஒரு மாதத்தில் வலிப்பு நோய்; மனைவியுடன் சேர்ந்து வாழ ரூ.10 லட்சம் டிமாண்ட்? - பறிபோன இளம்பெண் உயிர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion