மேலும் அறிய
Advertisement
Crime: திருமணமான ஒரு மாதத்தில் வலிப்பு நோய்; மனைவியுடன் சேர்ந்து வாழ ரூ.10 லட்சம் டிமாண்ட்? - பறிபோன இளம்பெண் உயிர்!
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டியதால் தான் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் திருமணமான ஒரு மாதத்தில் மனைவிக்கு வலிப்பு நோய் வந்ததால் கணவர் வாழ மறுத்துவிட்டாகவும், சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும் என கணவர் மிரட்டியதால், மனம் உடைந்த மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பாலை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் அருணா தேவி (23 வயது) . இவருக்கும் திருமங்கமலம் அலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருடன் கடந்த ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமணமான ஒரு மாதத்தில் சமைக்கும் போது, சமையல் பாத்திரம் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு லேசான வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இதனை அருணா தேவியின் வீட்டாருக்கு தகவல் சொல்லப்படாமல் இருந்துள்ளது. பின்னர் தகவல் தெரிந்த பெண்ணின் வீட்டார் வந்தபோது, கணவர், அருணாதேவியுடன் வாழ மறுத்துவிட்டார். மேலும் ”உடல் நலக்கோளாறு கொண்ட உன்னுடன் வாழ வேண்டும் என்றால் 10 லட்சம் வரதட்சணை கொடுக்க வேண்டும்” என கேட்டதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணின் தந்தை ”நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். தற்போது தான் திருமணத்திற்கு பல லட்சம் செலவு செய்தேன். சில மாதங்கள் போகட்டும் ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால் அருணா தேவி தனது தந்தை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தந்தை வீட்டில் இருந்த அருணா தேவி தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் கஷ்டம் கொடுக்க வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பெருமாள் திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருணா தேவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு மிரட்டியதால் தான் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டது பெண்ணின் உறவினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டால் தான் பெண்ணின் தற்கொலையில் நியாயம் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion