மேலும் அறிய
Advertisement
Madurai : தேவர் ஜெயந்தி விழாவின்போது மகளிர் கல்லூரிக்குள் புகுந்து ரகளை...! ஏழு பேர் ஜாமீன் மனு தள்ளுபடி.!
மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின்போது மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட 7 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலுள்ள லேடி டோக் மகளிர் கல்லூரிக்குள் டூவீலருடன் அத்துமீறி நுழைந்த கும்பல் கல்லூரி வாட்ச்மேனை எட்டி உதைத்து தாக்கினர். மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடமும் தகாதவாறு நடந்து கொண்டதுடன்,போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தினர் என தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், மணிகண்டன், முத்துவிக்னேஷ், வில்லியம் பிரான்சிஸ், விமல்ஜாய் பேட்ரிக், அருண் மற்றும் மைனர் சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.
மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவின்போது தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய தனியார் பெண்கள் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்து பாதுகாவலரை தாக்கி ரகளை ஈடுபட்ட ஒன்பது பேர் கைது.
— arunchinna (@arunreporter92) November 5, 2022
தற்போது மீனாட்சி கல்லூரி வெளியே ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கைது.@Mdu_CityPolice pic.twitter.com/5Da2dkINi7
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி சூர்யா, முத்துநவேஷ், அருண்பாண்டியன், மணிகண்டன், சேதுபாண்டியன், முத்துவிக்னேஷ், விமல்ஜாய் பேட்ரிக் ஆகியோர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி வடமலை விசாரித்தார். அரசு தரப்பில்,மது போதையில் வந்தவர்கள் வாட்ச்மேனை தாக்கி, டூவீலரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளனர். கல்லூரி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர்.
ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார்கள், சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன, பொது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது என வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 7 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கேட்டதோ ரேஷன் கடை, வந்ததோ டாஸ்மாக் கடை; மதுரையில் கவுன்சிலரை விரட்டிய பொதுமக்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion