மேலும் அறிய

மதுரை : உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டெடுப்பு..

திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது 

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.  சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் இலட்சுமண மூர்த்தி , ஆகியோர்  கொண்ட குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு செய்த போது சூலாயுதம் பொறிக்கப்பட்டு கிரந்த எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டறியப்பட்டது  . இக்கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்த போது பொ.ஆ 9 ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று அறிய முடிந்துள்ளது.

இது குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது, “பாண்டியர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்பு களுக்கும், மன்னர் பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மீது வரியை நீக்கி  கோவில்களுக்கு  (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் கோவில் பராமரிக்கப்பட்டது .இவற்றை தேவதானம் என்று அழைக்கப்படுவார். தேவதானம் வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் நான்கு மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பது வழக்கம். குறிப்பாக சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலதானம் ( திரிசூல குறியீடு) திருநாமத்துக்காணி என்றும்,  பெருமாள் கோவிலுக்கு வழங்கும் நில தானம் ( சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடையாட்டம் என்றும், சமண கோவிலுக்கு  வழங்கும் நில தானம் ( முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.

மதுரை : உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டெடுப்பு..

கல்வெட்டு செய்தி 

உச்சப்பட்டியில் மருத காளியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்ட தனித்தூண் கல்லில் 5 அடி நீளம் 1 ½ அடி அகலம் 3 வரி கிரந்தம் எழுத்துகளுடன் பொறிக்கப்பட்டு இருந்தன. கல்தூணின்  கீழ் பகுதியில் சிவன் கோவிலுக்கு நில தானம் வழங்கியதற்காக திரிசூலம் கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது.இக்கல்வெட்டின் எழுத்துக்கள் அதிக தேய்மானம் ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில்  அவனி , ஸ்ரீமாறன் , மடை , தம்மம், அவந்தி,  வேந்தன் என தொடச்சியற்ற வார்த்தைகள்  பொறிக்கப்பட்டுள்ளன.   இக்கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி காலம் ( பொ.ஆ 835 முதல் 862) பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்றும்,  கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் பொ.ஆ 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.சமீபத்தில் இப்பகுதியில் பொ.ஆ.15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு” என்றார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Railway: கொரோனாவிற்கு பிறகு மீண்டும் ரயில்நிலையங்களில் நின்று செல்லும் ரயில்கள்... மே 6 முதல் ஆரம்பம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
Embed widget