Thaipusam 2025: பக்தர்களே! மதுரை மீனாட்சித் தெப்பத் திருவிழா - இதோ நேரில் பாருங்க
Thaipusam Festival 2025: தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதை பக்தர்கள் நேரலையில் காணலாம்.

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் காலை முதல் கடல் போல குவிந்து வருகின்றனர்.
மதுரை தெப்பத் திருவிழா:
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இதே நன்னாளில் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் காலை முதல் குவிந்து வருகின்றனர். இந்த விழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் இதன் காரணமாக வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பரவசம் மிகுந்த கரகோஷத்துடன் தெப்பத்திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. ஏபிபி நாடு யூ டியூபில் நேரலையில் இதை காணலாம்.





















