TASMAC Holiday: 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மருதுபாண்டியார் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் வரும் அக்.27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
”27.10.2014 அன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருதுபாண்டியர், நினைவுதினத்தை முன்னிட்டும், 29.10.2024, 30.10.2024 ஆகிய நாட்களில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினவிழாவை முன்னிட்டும், மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு 27.10.204 (மாலை 07.00 மணி வரை மட்டும்). மற்றும் 29.10.2024, 30.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் (FL1/FL2/FL3/FL3A/FL4A/FL11) ஆகிய உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், படைவீரர்கள் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினங்களில் மது விற்பனை தொடர்பான விதி மீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது”. எனவும்.
- “தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்