மேலும் அறிய
Advertisement
தமிழ்நாட்டில், தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்..
டி.பி.எஸ் ஆக உள்ள ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
1. சிவகங்கை திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் 3 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆட்டுச்சந்தை தீபாவளியை முன்னிட்டு திருப்புவனம் ஆட்டுச்சந்தையில் ஒரு ஜோடி ஆடு 40,000 வரை விலை போனது.
2. சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது , எடப்பாடி முதலமைச்சர் பதவி ஆசையின் காரணமாக அவசர கோலத்தில் உள் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தார் - முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி.
3. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4.முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்காமல் 138.5 அடி இருக்கும் நிலையில் கேரளா பொதுப்பணித்துறை மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அணையிலிருந்து நீர் திறந்து விட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றும் கேரள அரசின் போக்கை கண்டித்தும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் நவம்பர் 9ஆம் தேதி 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தேனியில் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
5. தீபாவளி முன்னிட்டு தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6.ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியை அடுத்த பசும்பொன்னில், கடந்த அக் 28,29,30 ஆகிய நாட்களில் நடந்த
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களை இயக்கிய 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7. மதுரை அழகர்கோயில், சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா திருவிழா நவம்பர் 9-ம் தேதி மாலை சூரசம்ஹாரம் உற்சவ விழா பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது. அதே போல் பழனி உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.
8. தூத்துக்குடி மாவட்டம் டி.பி.எஸ் ஆக உள்ள ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
9. 'வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்' என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
10.இளையான்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion