மேலும் அறிய

நெருங்கி வரும் கோடை காலம்... தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி, கும்பக்கரை அருவிகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் குறைந்திருந்தது.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் மாவட்டத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மாவட்டத்தில்  உள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு வரும் நீர் வரத்து இல்லாததால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து குறைந்து அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.

திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!

நெருங்கி  வரும் கோடை காலம்... தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி, கும்பக்கரை அருவிகள்

அருவிக்கு நீர்வரத்து வரும் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் குறைந்திருந்தது. இந்த நிலையில், அருவி பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக கோடை காலம் நெறுங்கி வரும் நிலையில் விடுமுறை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களை கொண்டாட அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அருவியில் நீர்வரத்து அடியோடு நின்றதால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் இன்றி பாறையாக இருக்கும் பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது அருவியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு , குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது, இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?

நெருங்கி  வரும் கோடை காலம்... தண்ணீரின்றி வறண்டு காணப்படும் சுருளி, கும்பக்கரை அருவிகள்

தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுருளி அருவிக்கு அடுத்தபடியாக கும்பக்கரை அருவி உள்ளதால்  இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிரித்துள்ளது. தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில்  வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் நிலையில் முற்றிலும் குறைந்த அளவில் வரும் நீரில் ஒவ்வொரு நபராக குளித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைவதோடு வெயிலின் தாக்கத்தை தனித்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Pradeep Ranganathan: தொட்டதெல்லாம் ஹிட்டு... தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை.. வசூல் டிராகன் பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Ranganathan: தொட்டதெல்லாம் ஹிட்டு... தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை.. வசூல் டிராகன் பிரதீப் ரங்கநாதன்!
Gold Rate Reduced 22nd Oct.: உடனே கிளம்புங்க.! இன்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை - தற்போதைய விலை என்ன.?
உடனே கிளம்புங்க.! இன்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை - தற்போதைய விலை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vazhukku maram : கொட்டும் மழையில் சாகசம்வழுக்கு மரம் ஏறும் போட்டிமெய்சிலிர்க்க வைத்த வீரர்கள்
”சாதி இப்பவும் இருக்கு தான! மாரி செல்வராஜின் வலிகள்”துருவ் SUPPORT
தேஜஸ்வி நேருக்கு நேர்! அடித்துக்கொள்ளும் RJD-காங்கிரஸ்!
ஆரம்பிக்கலாங்களா... 6 நாட்களுக்கு கனமழை! எந்தெந்த இடங்களுக்கு வார்னிங்
Trump warns Modi | பதிலடி கொடுத்த இந்தியா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
TNPSC Group 4: எல்லோரும் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Pradeep Ranganathan: தொட்டதெல்லாம் ஹிட்டு... தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை.. வசூல் டிராகன் பிரதீப் ரங்கநாதன்!
Pradeep Ranganathan: தொட்டதெல்லாம் ஹிட்டு... தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை.. வசூல் டிராகன் பிரதீப் ரங்கநாதன்!
Gold Rate Reduced 22nd Oct.: உடனே கிளம்புங்க.! இன்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை - தற்போதைய விலை என்ன.?
உடனே கிளம்புங்க.! இன்று ஒரே நாளில் ரூ.3,680 குறைந்த தங்கம் விலை - தற்போதைய விலை என்ன.?
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட படகுகள், மீன் வலைகள்... மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட படகுகள், மீன் வலைகள்... மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
Neeraj Chopra in Army: இந்திய ‘தங்க மகன்‘ நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்த தங்கமான வாய்ப்பு; ராணுவத்தில் கவுரவ பதவி
இந்திய ‘தங்க மகன்‘ நீரஜ் சோப்ராவிற்கு கிடைத்த தங்கமான வாய்ப்பு; ராணுவத்தில் கவுரவ பதவி
தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடிக்கனும்...டியூட் வெற்றிவிழாவில் சரத்குமார் கலகலப் பேச்சு
தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடிக்கனும்...டியூட் வெற்றிவிழாவில் சரத்குமார் கலகலப் பேச்சு
TN Heavy Rain Alert: புயல் இல்லை; சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
புயல் இல்லை; சென்னை உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
Embed widget