மேலும் அறிய
Special Trains: தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில் ! பயணிகள் மகிழ்ச்சி
தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
![Special Trains: தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில் ! பயணிகள் மகிழ்ச்சி Special Trains Tambaram Kochuveli Festival Special Train Special Trains: தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில் ! பயணிகள் மகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/29/16d51908abab2d77caed80a866186894172759196200877_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரயில்
Source : એબીપી લાઇવ
இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
நவராத்திரி - தீபாவளி
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி கொண்டாட பல புராணங்கள் கூறப்பட்டாலும் அம்பிகையை 9 நாட்கள் வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த 9 நாட்களும் அம்பிகை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிறத்தில் பக்தர்களால் வணங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நவராத்திரி துவங்கியது. அதே போல் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை துவங்குகிறது. இந்த சூழலில் தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Special Trains between Tambaram and Kochuveli - தாம்பரம் - கொச்சுவேலி பண்டிகை கால சிறப்பு ரயில்
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க
தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion