Hyundai Exter Offer: 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. பட்ஜெட் கார் Hyundai Exter-ஐ ஏன் வாங்க வேண்டும்?
Hyundai Exter Offers: ஹுண்டாய் எக்ஸ்டர் காருக்கு ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 98 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஹுண்டாய். இந்தியாவில் பட்ஜெட் கார் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதந்தோறும் சிறப்பு தள்ளுபடிகளை அறிவிப்பது ஹுண்டாய் நிறுவனத்தின் வழக்கம்.
1 லட்சம் தள்ளுபடி:
2026ம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான தள்ளுபடியை ஹுண்டாய் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு கார்கள் இடம்பெற்றிருந்தாலும் அவர்களின் வெற்றிகரமான படைப்பான Hyundai Exter காருக்கு அதிக தள்ளுபடியை அளித்துள்ளனர். Hyundai Exter காருக்கு மட்டும் ஜனவரி மாத தள்ளுபடியாக ரூபாய் 98 ஆயிரம் அளித்துள்ளனர்.
1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் எஸ்யூவி ரகம் என்றாலும் இதன் விலையே ஹேட்ச்பேக் காரின் விலையில் அமைந்திருப்பது இந்த காரின் பக்கபலம் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.90 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.49 லட்சம் ஆகும்.
6 லட்சம்தான் பட்ஜெட்:
ஜனவரி மாத தள்ளுபடியால் இந்த காரை இந்த மாதம் ரூபாய் 6 லட்சத்திற்கும் குறைவான விலையிலே வாங்கலாம். இந்த காரில் மொத்தம் 38 வேரியண்ட்கள் உள்ளது. இந்திய சாலையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 19.4 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 82 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது இந்த கார். 113.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்கள் இந்த காரில் உள்ளது.
சிறப்பம்சங்கள்:
குரல் கட்டளையில் இயங்கும் எலக்ட்ரிக் சன்ரூஃப், கிளைமேட் கன்ட்ரோல் வசதி இந்த காரில் உள்ளது. இந்த காரின் உட்தோற்றம் சிறியதாக இருப்பது போல உள்ளது. ஆனாலும், பயணிப்பதற்கு ஏதுவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நெருக்கடியான குறுகலான இடங்களில் ஓட்டுவதற்கு இந்த கார் செளகரியமானதாகவே அமைவதாக குறிப்பிடுகிறது. வயர்லஸ் சார்ஜர், யுஎஸ்பி சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்டது.
6 ஏர்பேக் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வதி உள்ளது. பின்பக்க பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. எமர்ஜென்சி ப்ரேக்கில் ஸ்டாப் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 15 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நிசான் மெக்னைட், டாடா பஞ்ச், ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.





















