மேலும் அறிய

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை & கண்ணாடிகள்: புரிந்துணர்வு ஒப்பந்தம்!

பார்வை குறைபாடு உடைய மாணவ, மாணவிகளில் கண்டறியப்பட்டு ஆகியோர் தலைமையில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.  

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

அரவிந்த் கண் மருத்துவமனை
 
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மதுரை மாநகராட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை மற்றும் கண் கண்ணாடிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் சித்ரா விஜயன், முன்னிலையில் இன்று (13.10.2025) மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரவிந்த் கண் மருத்துவமனை (குழந்தைகள் கண் மருத்துவத் துறை தலைவர்) மருத்துவர். விஜயலெட்சுமி பெற்றுக் கொண்டனர்.   
 
மாணவிகள் புத்தாக்கம்
 
மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 26 ஆரம்பபள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 15 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 64 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ. மாணவிகள் புத்தாக்கம் பெறுவதற்கு மாநகராட்சியின் சார்பில் விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவில் மற்றும் மாநில நடைபெறும் பல்வேறு குறு விளையாட்டு போட்டிகள், உயர்கல்வி வழிகாட்டுதல், மற்றும் மேஜிக் ஷோ, புத்தகம் வாசிப்பு, பசுமை நடைபயணம், ஐதராபாத் அறிவியல் மையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சுற்றுப்பயணம் உள்ளிட்டவை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு  அரவிந்த கண் மருத்துவமனை சார்பில் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகளில் நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதில் 226 பார்வை குறைபாடு உடைய மாணவ, மாணவிகளில் கண்டறியப்பட்டு கடந்த 26.08.2025 அன்று மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.  
 
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது
 
அதன் தொடர் நிகழ்வாக  மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் நலத்தை காக்கும் பொருட்டு மதுரை மாநகராட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவபரிசோதனை மற்றும் கண்கண்ணாடிகள் வழங்குவதற்கான (ஐந்து ஆண்டு காலம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் இன்று (13.10.2025) கையொப்பம் இடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர். விஜயலெட்சுமி அவர்களிடம் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்கள். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதால் பள்ளி மாணவ, மாணவிகளின் உடல் நலனையும் கல்வித் திறனையும் மேம்படுத்தும். இந்நிகழ்வில் துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், அரவிந்த் கண் மருத்துவமனை குழந்தைகள் கண் மருத்துவத் துறை தலைவர் மருத்துவர்.விஜயலெட்சுமி, கல்வி அலுவலர் ஜெய்சங்கர்,  முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை, அர்விந்த் கண் மருத்துவமனை திட்ட மேலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget