மேலும் அறிய
Southern Railway: தாம்பரம் - கொச்சுவேலி ஏ.சி. சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

சிறப்பு ரயில்
Source : whats app
தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு ரயில்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) வரை ஒரு சிறப்பு ரயில் டிசம்பர் மாத இறுதி வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரயிலின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரம் - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) சிறப்பு ரயில் (06035) ஜனவரி 03, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் சென்று சேரும்.
திருவனந்தபுரம் வடக்கு - தாம்பரம் சிறப்பு ரயில்
மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜனவரி 05, 12, 19, 26 மற்றும் பிப்ரவரி 02 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து மாலை 03.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















