மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரயில்கள் வழித்தடம் மாற்றம், சில ரயில்கள் ரத்து! முழு விபரம் இதோ
கன்னியாகுமரியில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு சார்லப்பள்ளி ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கோட்டையில் இருந்து 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையிலும், கன்னியாகுமரியில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு சார்லப்பள்ளி ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செங்கோட்டையில் இருந்து 14, 16, 17, 18, 20, 21, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16848), கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்கள் செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும். கூடுதல் நிறுத்தமாக அருப்புக்கோட்டை, சிவகங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வரும் 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி செல்லும் சிறப்பு ரயில் (07229), மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக சார்லப்பள்ளி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து வரும் 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மேற்குவங்க மாநிலம் ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), மதுரை, திண்டுக்கல் செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கூடுதல் நிறுத்தமாக புதுக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து வரும் 15, 18, 22, 25, 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16847), வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி செல்லாமல், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செங்கோட்டை செல்லும். கூடுதல் நிறுத்தமாக புதுக்கோட்டை, சிவகங்கை, அருப்புக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து வரும் 15, 30 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16322), திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். மதுரையில் இருந்து வரும் 18, 25 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உளள் காச்சிக்குடா செல்லும் சிறப்பு ரயில் (07192), அதற்கு மாற்றாக மதியம் 12 மணிக்கு புறப்பட்டு (1 மணி நேரம் 20 நிமிடம் தாமதம்) காச்சிக்குடா செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





















