மேலும் அறிய

Kachanatham Case: தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் கொலை வழக்கு..! 27 பேரும் குற்றவாளிகள்..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Kachanatham Case Judgement: தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், கச்சநத்தம் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கச்சநத்தம் கிராமத்தில் 2018 மே 28- ஆம் தேதி ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்கியதில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன், தனசேகரன் ஆகிய 3 நபர்கள் உயிரிழந்தனர்.
 
Kachanatham Case: தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் கொலை வழக்கு..! 27 பேரும் குற்றவாளிகள்..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
 
இந்நிலையில்  தொடர்பாக பழையனூர் போலீசார் 33 பேர் மீது வழக்கு பதிந்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. நான்கு ஆண்டு நடந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 நபர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 31 பேர் மீது கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு, கச்சநத்தம், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கிராமங்களுக்கு வரும் நபர்கள் விசாரிக்கப்பட்டனர். அதே போல் சிவகங்கை நீதி மன்றத்தில்லும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஒவ்வொரு நபர்களை விசாரித்து உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு இன்று ஆகஸ்ட் 1ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Kachanatham Case: தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் கொலை வழக்கு..! 27 பேரும் குற்றவாளிகள்..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
 
நான்கு வருடங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டதால்,  பெரும் பரபரப்பு எதிர்பார்ப்பும்  நிலவி வந்தது. இந்நிலையில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். நீதிமன்ற வளாகத்திற்குள், வழக்கு தொடர்பான வழக்கறிஞரை தவிர யாரும் அனுமதிக்கப்பட வேண்டாம் என்றும் தீர்ப்பின் விவரம் ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.  சிவகங்கை ஒருங்கிணைந்த எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
100 கோடி பழனி மடம் நில மோசடி: ஏஐஜி தலைமையில் தீவிர விசாரணை! நடந்தது என்ன?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget