மேலும் அறிய
சிவகங்கை மீன் வளர்ப்போருக்கு நற்செய்தி..ரோகு, மிர்கால் மீன் விரலிகள் வாங்கலாம்
மீன் வளர்ப்போர் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மீன்விரலிகளை வாங்கி பயன்பெறலாம்.

நாட்டு வகை மீன்கள்
ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மீன்விரலிகளை வாங்கி பயன்பெறலாம்
சிவகங்கை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தற்போது ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்போர் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மீன்விரலிகளை வாங்கி பயன்பெறலாம்.
தொடர்பு எண் இது தான்
எனவே, மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணை, கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர் சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது மீன்வள ஆய்வாளர் அவர்களை 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும், மீன்வள மேற்பார்வையாளர் தரம் II அவர்களை 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















