மேலும் அறிய
Advertisement
சித்தார்த்தின் பெற்றோரை ஹிந்தி பேசச்சொல்லி காக்க வைத்த விவகாரம்: விசாரணை நடத்த சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை..
மதுரை விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் நடிகர் சித்தார்த்தின் பெற்றோரை இந்தி பேச சொல்லி காக்க வைத்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையம் மூலமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்கள் வந்தபோது அவர்கள் கொண்டு வந்த உடமைகள் அடங்கிய கை பையில் நாணயம் இருந்ததால் ஸ்கேனர் செய்யும்போது தெரியவந்தது. அந்தப் பையில் உள்ள நாணயங்களை அகற்றுமாறு மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் இந்தியில் கூறவே இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
I have requested the @aaimduairport to conduct an enquiry into the allegations of actor Siddharth about the improper conduct of CISF personnel in Madurai airport who demanded to be spoken to in Hindi#Siddharth #Actor #Tamil #StopHindiImposition pic.twitter.com/BmvtxB3lss
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 28, 2022
மதுரை விமான நிலையத்தில் கூட்டம் இல்லாத நேரத்திலும் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த ஊடகம் மூலமாக தகவல் தெரிந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை விமான நிலைய பாதுகாப்பு வீரர்கள் நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் ஹிந்தியில் பேச வேண்டும் என கூறியது குறித்து மதுரை விமான நிலையம் உரிய விசாரணை செய்ய வேண்டும் என கூறியதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதனால் பலரும் விசாரணை நடத்த வேண்டும் என சமூக வலைதலங்களில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion