மதுரை : முதல்வர் பொம்மைபோல ஊர் ஊராக சுற்றிவருகிறார்.. செல்லூர் ராஜு சாடல்..
’பெண்களுக்கு ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் தி.மு.கவை ஊருக்கு, ஊரு விரட்டி விடுவார்கள்" செல்லூர் கே.ராஜூ சாடல்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கடும் வெயிலில் ஏராளமான தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது செல்லூர் கே.ராஜூ மேடையில் பேசுகையில்..." திமுகவிற்கும் அண்ணாவிற்கு என்ன சம்மந்தம், அண்ணாவின் கொள்கையை குழி தோண்டி புதைத்தவர்களே தி.மு.கவினர்தான். ஆனால் தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் பிரகாஷ் ராஜ் டென்சன் ஆனால் சிரிப்பார், அதைப் போல் தி.மு.க அரசைப் பார்த்து சிரித்து விடவேண்டும். இல்லை என்றால் நமக்கு பிரஷர் வந்துவிடம்.
— arunchinna (@arunreporter92) September 16, 2022
- முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl pic.twitter.com/xwSsEA8ezJ
தி.மு.க., விபத்தில் ஜெயித்துவிட்டார்கள். 3 லட்சம் ஓட்டில் மாறிவிட்டது. அடுத்த முறை அதிமுக அமோகமாக வெற்றி பெரும். அதிமுக உலகத்தரம் வாய்ந்த திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். ஆனால் தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை. தமிழ்நாட்டிற்கே நிதி ஒதுக்கும் நிதி அமைச்சர் அவரின் தொகுதியில் கூட ஒன்றுமே செய்யவில்லை. தி.மு.க ஆட்சியில் கட்சியும் கன்ரோல் இல்லை, ஆட்சியும் கன்ட்ரோல் இல்லை. ஆ.ராஜா பேசியதற்கு நீக்கி இருக்க வேண்டும்.
2 ஜி ஊழலில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஆ.ராஜா அவர் சொல்கிறார். இந்துக்கள் விபச்சாரி வீட்டுப் பிள்ளைகள் என்று. தினமும் கோவில் கோவிலாக செல்கிறாறே முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர் விபச்சாரி விட்டு பிள்ளையா??? இதை கேட்பீர்களா???. ஆ.ராஜாவை இந்நேரம் நீக்கி இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினை இயக்குவது யார் மருமகன் சபரீசன். அதில் முதல்வர் தலையீடுவதே இல்லை, ஸ்டாலின் டிவி, போட்டோக்கு போஸ் கொடுங்கள் என சபரீசன் அனுப்பி வைத்து விடுகிறார். முதல்வர் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமாத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் ஆட்சி காலத்தில் மண்டலமாக பிரிக்கப்படும் இப்போது அதுவும் இல்லை. கனிமொழிக்கு அதில் இடமில்லை. முதல்வர் பொம்மை மாதிரி மட்டுமல்ல, பொம்மை நவராத்திரியில் வைப்பாங்களே அந்த பொம்மைபோல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று போஸ் கொடுக்கிறார். தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படக்கூடாது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிரகாஷ் ராஜ் கோவம் வந்தால் சிரிப்பார். அதைப் போல் தி.மு.க ஆட்சியை பார்த்து கோவப்படாமல் சிரித்துவிட வேண்டும். இல்லை என்றால் பிரஷர் ஏற்படும். அம்மா மினி கிளினிக் மூடுவிழா கொண்டாடப்பட்டது. ஆனால் மக்களை தேடிய மருத்துவத்தை கூட திமுக முறையாக செயல்படுத்தவில்லை. பெண்களுக்கு ஆயிரம் கொடுக்கவில்லை என்றால் திமுகவை ஊருக்கு, ஊரு விரட்டி விடுவார்கள்" என்று தாக்கிப் பேசினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்