தேனி அருகே வீட்டில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள 2100 மதுபாட்டில்கள் பறிமுதல்
’’விடுமுறை நாட்களில் சட்டவிரோத விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் ஒருவர் கைது மற்றொருவர் தப்பியோட்டம்’’
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள T.கள்ளிப்பட்டி பகுதியில் வீட்டில் மதுபாட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து T.கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த பாஸ்கரன் எனபவரது வீட்டிற்கு சென்று பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் சோதனை செய்ய சென்ற காவல்துறை வருவதை கண்ட பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தப்பி ஓடினர்.
இந்நிலையில் காவல்துறையினர் பாஸ்கரனின் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் அரசு மதுபானக்கடைகளில் அடுக்கி வைப்பது போன்று பெட்டி பெட்டியாக 1700 மதுபாட்டிகள் அடுக்கி வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். இதனை தொடர்ந்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்து மதுபாட்டில்களை கைபற்றிய காவல்துறையினர் தப்பி ஓட்டிய பாஸ்கரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் தேடிய போது ரமேஷை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் ரமேஷை பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய பாஸ்கரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காவல்துறை விசாரணையில் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குரு பூஜை நாட்களில் தேனி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகள் விடுமுறை எனபதால் விடுமுறை நாட்களில் விற்பனைகாக தேனியின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் இருந்து மொத்த மொத்தமாக வாங்கி விட்டில் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டிகள் மாவட்டத்தில் எந்த எந்த அரசு மதுபானக்கடைகளில் இருந்து வாங்கப்பட்டுள்ளது என விசாரணை நடைபெற்று வருவதாகவும் எந்த கடை என உறுதி செய்யப்பட்ட பின்பு அரசு மதுபானக்கடை பணியாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
பழனி மலை அடிவாரத்தில் சைரன் காருடன் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது
தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
’பருவ வயதை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் வாசித்த புத்தகம் ’- கோவை ஆட்சியர் சொன்ன குட்டி ஸ்டோரி..!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்