சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை: நேரில் ஆஜராகி சாட்சி அளித்த பிஎஸ்என்எல் அதிகாரிகள்
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சாத்தான்குளத்தில் தான் இருந்தனர் என்பதற்கான சாட்சியங்களை அளித்தனர்.
![சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை: நேரில் ஆஜராகி சாட்சி அளித்த பிஎஸ்என்எல் அதிகாரிகள் Satankulam murder case investigation - BSNL officer appears in person and gives testimony சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை: நேரில் ஆஜராகி சாட்சி அளித்த பிஎஸ்என்எல் அதிகாரிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/622fdc3dd945475e5e92a47deb9545331661318183778102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையில் பி.எஸ்.என்.எல் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது பிஎஸ்என்எல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர் . அவர்கள் கூறுகையில், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்திய பொழுது , குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சாத்தான்குளத்தில் தான் இருந்தனர் என்பதற்கான சாட்சியங்களை அளித்து, ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)