மேலும் அறிய

சிலந்திக் கதை.. காலை பிடித்து மேல வந்தவர்கள் - வி.கே.சசிகலா சொன்ன குட்டிக் கதை யாருக்கு !

யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் - உசிலம்பட்டியில் சசிகலா பேச்சு.

இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம், அதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் - உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா பேச்சு
 
உசிலம்பட்டி அன்பு என்றும் மாறாததது
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மைதானத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா-வின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிக்கலா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் சசிக்கலா..,” உசிலம்பட்டி அன்பு என்றும் மாறாததது. புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த போது முதல் தேர்தல் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் அதில் மகத்தான வெற்றியை தந்தீர்கள். அந்த வகையில் புரட்சி தலைவர், புரட்சி தலைவி மீது அன்பு கொண்ட உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்று சுயேட்சை சின்னமாக இரட்டை இலை தேர்தலில் நின்ற போது அமோக வரவேற்பு அளித்து வெற்றி பெற செய்தனர் இந்த உசிலம்பட்டி மக்கள்.
 
திமுக அரசு எதையும் செய்வதில்லை
 
தமிழக மக்களின் இதயங்களில் நீக்கமர நிறைந்திருப்பவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர்-ம், புரட்சி தலைவி அம்மாவும். ஏழை மக்களுக்கா பல்வேறு திட்டங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால் திமுக மக்களை கசக்கி புளிகிறது. இப்போது திமுக அரசு எதையும் செய்வதில்லை. தற்போது வரை எதும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்கின்றனர். காவேரி நதிநீர் மற்றும் முல்லை பெரியாறு அணைக்கு மத்திய அரசுடன் இணைக்கமாக உரிய தீர்வு ஏற்படுத்தினார் அம்மா. ஆனால் திமுக மத்திய அரசுடன் குடும்ப சுயநலத்திற்காக மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் தான் பாதிப்படைந்து வருகிறார்கள். வரும் தேர்தலில் விளம்பரத்தை வைத்து ஆட்சிக்கு வந்து விடலாம் என பகல் கனவு கண்டு வருகின்றனர். பெண்கள் வாழ தகுதி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. ஆனால் அப்பா வேசம் போட்டு வருகிறார். சமீபத்தில் துணை ஆணையர் அலுவலகத்திலேயே அசம்பாவிம் அரங்கேறியது திமுகவின் வேசம் கலையும் நேரம் வந்துவிட்டது. அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என அனைத்து மக்களும் எண்ணுகின்றனர்.
 
இமயமும் நம் காலடியில்
 
காலை பிடித்து மேல வந்தது குறித்தும், பின் பக்கம் வந்தவர்களை மிதித்து தள்ளினார் என சிலந்தி கதை. யாராக இருந்தாலும் தனது சுய விருப்பு வெறுப்பின்றி தன்னலத்துடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அனைவரின் எண்ணத்தையும் ஈடேற்றும் வகையில் ஒன்றிணைவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம். அதிமுக தான் எனது உயிர் மூச்சு, இந்த இயக்கம் மீண்டும் எழுந்து செயல்பட வைப்பதே எனது லட்சியம். ஒன்றிணைக்கும் முயற்சியை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். எழுந்து நடந்தால் இமையமும் நம் காலடியில் என பேசினார்.
 
தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் விழா ஏற்பாட்டில் பங்கு வகித்தது, கூட்டத்தை கூட்டியதில் பங்காற்றிய ஒபிஎஸ் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், அமமுக வின் முக்கிய நிர்வாகிகள் இவ்விழாவில் இறுதி வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,

தலைப்பு செய்திகள்

கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
மதுரையில் அதிரடி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு சீல்!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget