ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல் கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.
![ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல் கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு Retired judge Chanduru report copy tear Theni panchayat committee meeting - TNN ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழுவின் அறிக்கை நகல் கிழிப்பு - தேனி ஊராட்சி குழு கூட்டத்தில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/19/ed1cc2a5f2881e943a03b6cd638507d81718793589066739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாங்குநேரியில் பள்ளி மாணவன் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.
கள்ளர் மறுசீரமைப்பு பள்ளி மாதிரி திராவிடர் நல பள்ளி போன்றவற்றை நீக்கி அரசு பள்ளி என அரசு அழைக்க அரசாணை வெளியிட வேண்டும், பள்ளி பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவக்க அனுமதி அளிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் ஜாதி பெயர் இருந்தால் அதை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் நெற்றியில் திலகம் அணிய தடை விதிக்க வேண்டும். ஜாதியை அடையாளத்தை குறிக்கும் வகையில் சைக்கிள்களில் வண்ணம் தீட்ட கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கை அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் 70% அதிகமாக சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில், ஏற்கனவே திலகம் இடுவது, கையில் கயிறு அணிவது ஆகியனவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முழுக்க முழுக்க இந்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சந்துரு தனது ஆய்வை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இந்த ஆய்வறிக்கையை அமல்படுத்தக் கூடாது எனவும் சந்துரு ஆய்வறிக்கையை தேனி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி. இந்த குழு கூட்டத்தில் இந்த செயலை செய்யக்கூடாது எனவும், இது மக்கள் நலனுக்காக நடத்தப்படும் பொதுவான கூட்டம் என்றும் ஊராட்சி செயலர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் சந்ருவின் அறிக்கைக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)