மதுரை: நூற்றாண்டு பழமைவாய்ந்த 10க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைப்பு... திருப்பணி நிபுணர் குழு அனுமதி!
விரைவில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் திட்ட வரையறை தயாரிக்கப்படும் என கோயில் நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் நூற்றாண்டுகள் கடந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் கூட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது தொடர்பான கூட்டத்தில் புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் நூற்றாண்டு பழமையான 10க்கும் மேற்பட்ட கோவில்களை புனரமைக்க மாநில அளவிலான திருப்பணி நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. விரைவில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மூலம் திட்ட வரையறை தயாரிக்கப்படும் என கோவில் நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.@SRajaJourno | #madurai #Temple pic.twitter.com/wLDuBu3kB0
— Arunchinna (@iamarunchinna) July 27, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்