மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கனஅடியாக குறைப்பு

தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து குறைவால் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாகும். இதில் 142 அடி வரை நீரை தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் கடந்த 30ஆம் தேதி அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
 
முல்லை பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கனஅடியாக குறைப்பு
 
கடந்த ஒரு சில தினங்களாக அணையின் நீர்மட்டம் 141.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு வினாடிக்கு 1900 கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஆரம்பித்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  கன மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது. இதனால், கேரளாவுக்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டது.  அதன்படி, அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கன அடியாகவும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,727 கன அடியில் இருந்து 1,062 கன அடியாகவும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 
 
முல்லை பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கனஅடியாக குறைப்பு

மேலும் நேற்றும், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 406 கன அடியாக குறைந்தது.  இன்று அணையிலிருந்து நீர் திறப்பானது குறைந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்  பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம்   முல்லைப்பெரியாறு 28.8, தேக்கடி21.6, கூடலூர் 61.7, உத்தமபாளையம் 93.0, வைகை அணை 28.2, வீரபாண்டி 128.0, சோத்துப்பாறை 14.0, பெரியகுளம் 2.0, போடி 98.2, அரண்மனைப்புதூர் 80.2, ஆண்டிப்பட்டி 64.0.

முல்லை பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கனஅடியாக குறைப்பு
 
தேனி  மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகள் நிலவரம்
 
வைகை அணை: நீர்மட்டம்  - 70.11 (71 அடி),  நீர் இருப்பு – 5,855 மில்லியன் கன அடி,  நீர் வரத்து – 6,294 கனஅடி,  நீர் திறப்பு – 8,681கனஅடி                 

மஞ்சலார் அணை: நீர்மட்டம்  - 55.00 (57 அடி) ,நீர் இருப்பு – 435.32 மில்லியன் கனஅடி , நீர் வரத்து – 100 கன அடி , நீர் திறப்பு– 0 

சோத்துப்பாறை அணை: நீர்மட்டம் - 126.80 (126.28 அடி) , நீர் இருப்பு – 100 மில்லியன் கனஅடி, நீர் வரத்து –46 கனஅடி, நீர் திறப்பு –30 கனஅடி
 
சண்முகா நதி அணை: நீர்மட்டம்  - 52.50 (52.55 அடி), நீர் இருப்பு – 79.57 மில்லியன் கனஅடி, நீர் வரத்து – 9 கனஅடி, நீர் திறப்பு – 0 கனஅடி

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget