மேலும் அறிய
Advertisement
RB Udayakumar: தமிழ்நாட்டில் யார் முதல்வர்... குழப்பத்தில் மக்கள் - ஆர்.பி.உதயகுமார்
திமுக கட்சி செய்யும் அட்டூழியத்திற்கு வேறு எந்த கட்சியும் வாய் திறப்பதில்லை, ஒரு நாள் இந்த ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக திரும்பினால் அந்த நிமிடமே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும்.
அவருக்கு வாய் பேச முடியாதா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அதிமுக உசிலம்பட்டி ஒன்றிய அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், "மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 234 தொகுதிக்கும், மக்களுக்கும் என்ன திட்டங்களை கொடுத்தீர்கள் என விவாதம் செய்ய முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் சவால் விட்டால், ஒன்று முதலமைச்சர் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும், சவாலை மறுக்க வேண்டும்., இன்று அந்த சவாலுக்கு உதயநிதி ஸ்டாலின் நான் வருகிறேன் என சொல்கிறார். ஏன் உதயநிதி ஸ்டாலினின் தந்தை மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தானே இருக்கிறார். அவருக்கு வாய் பேச முடியாதா, பதில் சொல்ல முடியாதா, அவருக்கு பேச்சு வருமா, அறிவு உள்ளதா என நாங்கள் கேட்கவில்லை தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
- திமுக கவுன்சிலர் அடித்து நொறுக்கிய பலகாரக் கடை; பேசி முடிக்கப்பட்ட பிரச்னை - உண்மையில் நடந்தது என்ன?
மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்
சவால் விடுத்தது ஸ்டாலினுக்கு என்று சொன்னால், பதில் சொல்வது உதயநிதி ஸ்டாலின் என்று சொன்னால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினா, உதயநிதி ஸ்டாலின் ஆ என மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். கருணாநிதி மகனாகவும், பேரனாகவும் ஸ்டாலின், உதயநிதி இல்லையென்றால் ஒரு கவுன்சிலர்களை வெற்றி பெற்றிருக்க முடியாது. எல்லா அரசு திட்டத்திற்கும் கலைஞர் பெயரை சூட்டுவது நியாயமா, மதுரையில் ஜல்லிக்கட்டு மைதானம் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டது வீணாகிய திட்டமா என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அங்கு எங்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு என்றால் மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூட எங்கள் ஊர் அலங்காநல்லூரில் நடத்துகிற ஜல்லிக்கட்டு, அந்த வாடிவாசல் என்றால் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஆனால் நீங்கள் நடத்துவது மல்லிக்கட்டு அதனால் அது வீணாகி போன திட்டம், அதைத்தான் மக்கள் வரிப்பணத்தை இப்படி வாரி இறைத்து கலைஞர் பெயரை சூட்டுவது நியாயமா என எடப்பாடி பழனிசாமி கேட்டார். திமுக கட்சி செய்யும் அட்டூழியத்திற்கு வேறு எந்த கட்சியும் வாய் திறப்பதில்லை, ஒரு நாள் இந்த ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக திரும்பினால் அந்த நிமிடமே திமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என எடப்பாடி பழனிசாமி சென்னார். 100 நாள் வேலை திட்டத்திற்கு கூட சம்பளம் போட முடியாத நிலையில் திமுகவின் ஆட்சி இருக்கிறது” எனப் பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Naga Chaitanya - Shobhita : நோட் பண்ணுங்கப்பா... திருமணத்திற்கு செம லொகேஷன் பார்த்த நாக சைதன்யா
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion