மேலும் அறிய

”அசைன்மெண்ட் NTK - உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்ட Task” அதிர்ச்சியில் நிர்வாகிகள்..?

”விரைவில் சீமானுக்கு நெருக்கமாக உள்ள நபர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்வதற்கான பின்னணி வேலைகளை உளவுத்துறையினர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது”

தன்னுடைய ஒவ்வொரு மேடைகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அறிக்கைகள் மூலமாகவும் திமுகவையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிவாளம் போடும் வகையில், அவர் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை ராஜினாமா செய்ய வைக்கும் அசைன்மெண்ட் தமிழக உளவுத்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமானின் செயல்பாடுகளால் கட்சியினர் அதிருப்தி ?

அதே நேரத்தின் சீமானின் செயல்பாடுகள், அவரது நடவடிக்கைகளில் ஜனநாயகம் இல்லை என்றும் ’நானே கட்சி, இருப்பவர்கள் இருங்கள் ; வெளியேற நினைப்பவர்கள் செல்லுங்கள்’ என்ற தொனியிலும் சீமான் பேசி வருவதால், ஏற்கனவே, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் நாம் தமிழர் தொண்டர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், அவர் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை குறி வைத்து கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வருவதை கண்ட திமுக தலைமை நாம் தமிழர் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான அசைண்மெண்டை தமிழக உளவுத்துறை வசம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ அதிர்ச்சியில் நா.த.க

மேலும், சீமான் கட்சி நிர்வாகிகள் காளியம்மாள், வெண்ணிலா உள்ளிட்ட பெண்களையும் ஆண் நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டதற்கு பின்னணியிலும் தமிழக உளவுத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட இன்னும் பல ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், ஆவணங்கள் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சீமான் தொடர்ந்து திமுகவை தமிழ்நாடு அரசையும் விமர்சித்து பேசி வந்தால், தேர்தல் நெருக்கத்தில் அவைகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுவெளியில் வெளியிடவும் அவர்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிகிறது.

சீமான் ஆதரவாளர்கள் மீது வழக்கு?

அதே நேரத்தில் சீமானுக்கு மிக நெருக்கமாக இருக்கும் கட்சி நிர்வாகிகள், அவரது நண்பர்கள், நிதி உதவி செய்யும் தொழிலதிபர்கள் இவர்களையெல்லாம் குறி வைத்து அடுத்தடுத்து வழக்குகளை போட தமிழக உளவுத்துறை மூலம் அவர்கள் குறித்த பின்னணி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை குறி வைத்து புதிய, புதிய வழக்குகள் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில், வேறு வகையிலும் சீமான் மீது அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை ராஜினமா செய்ய வைத்து, அவர்களை வேறு கட்சிக்கு மடைமாற்றும் நடவடிக்கைகளும் நடக்கப்போகும் நாட்களும் வெகுத்தொலைவில் இல்லை என்று காவல்துறை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்த தகவல் வெளியான பின்னர், எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற ரீதியில் சீமான் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும், ஆனால், சில நிர்வாகிகள் நமக்கு எதற்கு வம்பு என்று நாம் தமிழர் கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் முடிவை எடுக்கலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சித் தொடங்கியதில் இருந்து தனித்து நின்று தன்னுடைய வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்டி வரும் சீமான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து போட்டி என்பதையே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ;  உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ; உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ;  உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ; உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி
Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி
Breaking News LIVE 12th Nov : டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE 12th Nov : டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதலமைச்சர் ஸ்டாலின்
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Embed widget