மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
பயணிகள் கவனத்திற்கு...சென்னை - மதுரை தேஜஸ் ரயில் சேவையில் மாற்றம்
ரயில் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானன்மதுரை மற்றும் விருதுநகர், மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், கூடல்நகர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்நிலையில் திண்டுக்கல் திருச்சி பகுதியில் கட்டுமானப்பணிகள் காரணமாக வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் 12ம் தேதி சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் திருச்சி வரையே செல்லும், அதேநாளில் மறுமார்க்கமாக செல்லும் அந்த ரயில் திருச்சியில் இருந்தே சென்னை புறப்படும். தாமரைப்பட்டி- வடமதுரை இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இந்த ரயில் பிரிவு பணிகள் காரணமாக 11 மற்றும் 12ம் தேதியன்று புறப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் விருதுநகர், மானாமதுரை வழியாக திருப்பி விடப்படும் எனவும், இந்த ரயில் காரைக்குடி மற்றும் திருச்சி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வலியாம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோ 11ம் தேதியன்று குருவாயூர்-சென்னை எழும்பூர் ரயில் வழியாக விருதுநகர், மானாமதுரை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளதாகவும், இந்த ரயில் காரைக்குடி மற்றும் திருச்சி, மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் மற்றும் மணப்பாறையில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12.04.2023 அன்று தொடங்கும் சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் விருதுநகர் மானாமதுரை வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானன்மதுரை மற்றும் விருதுநகர், மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், கூடல்நகர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சசிகலாவை அழைப்பது குறித்து ஒவ்வொன்றாக அறிவிப்புகள் வரும் - ஓ.பன்னீர்செல்வம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion