தேனி: கொட்டக்குடி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு - கரையோர பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் போடி, குரங்கனி வனப்பகுதியில் உருவெடுக்கும் கொட்டக்குடி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் குரங்கனி வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் பத்தாவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வேலையில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதில் ராட்சத மரங்கள் அடித்து வரப்பட்டு அணைக்கட்டின் மேல் பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கிறது. மேலும், இந்த வெள்ளப்பெருக்கில் ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் பெரும் மீனாட்சிபுரம் கம்மாய், வங்காரு சாமி குளம், சங்கரப்பன் குளம் உள்ளிட்டவை நிரம்பியதால் ராஜ வாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி மூலம் வைகை அணைக்கு செல்கின்றது. இதன் காரணமாக அணைக்கட்டு நீர்வீழ்ச்சி பகுதியில் காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பொதுமக்களை அனுமதிக்காமல் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Victim Who is Next: பா.ரஞ்சித் இயக்கிய தம்மம் படத்தின் ஜம்பம் பலித்ததா? ஆழமான விமர்சனம் இதோ!
அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டங்களை தந்ததால் பாதிப்பு - அமைச்சர் மெய்யநாதன்
அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதால் கொட்டகுடி ஆறு செல்லும் பகுதிகளான அணைக்கரைப்பட்டி மீனாட்சிபுரம், கோடாங்கி பட்டி, பழனிசெட்டிபட்டி, தேனி, அரண்மனை புதூர் பகுதி மற்றும் கொட்டகுடி கரையோர பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டுவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரித்து கண்காணித்து வருகின்றனர். பொதுப்பணித்துறையினருடன் காவல்துறையினரும் வருவாய் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்