மேலும் அறிய
Advertisement
’வங்கிகள் கடன் கொடுக்கவில்லை என்றால் கந்துவட்டி அதிகரிக்கும்’ - எச்சரிக்கும் நிதி அமைச்சர் !
பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றால் கந்து வட்டிகள் அதிகரிக்கும் என மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சிறுகுறு தொழில் வர்த்தக சங்கத்தில் வங்கி - வாடிக்கையாளர்கள் தொடர்பு சிறப்பு நிகழ்ச்சி முகாமில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ”தமிழ்நாட்டில் நிதி ஆதாரத்தை பெருக்க முதல்வர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சமூகநீதி என்பது யாரும் பின்தங்காமல் அனைவரையும் இணைத்து வளர்ச்சியடைய வைப்பதே எங்களின் இலக்காக உள்ளது. அரசினுடைய இலக்குகளை திட்டங்களை செயல்படுத்த அரசும், வங்கிகளும் இணைந்து வேலை செய்தால் தான் வளர்ச்சியடைய முடியும். பேரிடர் நேரத்தில் அரசாங்கமும், வங்கிகளும் இணைந்து வேலை செய்வதுதான் சாமத்தியம்.
மேலும் அமைச்சர் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்த செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”GST வேண்டாம் என்கிற "அம்மா"வின் வெளிப்படையான நிலைப்பாட்டிற்கு எதிராக ஏன் செயல்பட்டீர்கள்?” - பி.டி.ஆர்
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் கையில் பணம் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 5 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் கையில் பணம் கொடுக்கப்பட்டது, நிவாரணம். கடன்கள் என பல்வேறு வழியில் பணம் கொடுக்கப்பட்டது, கொரோனா காலகட்டத்தில் மக்கள் பணம் இன்றி பாதிக்கப்பட்டு இருந்தனர். பொதுத்துறை வங்கிகள் தொழில்நுட்ப மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், வங்கிகளில் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதால் வாடிக்கையாளர்கள் அதிகாரிப்பார்கள், பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றால் கந்து வட்டிகள் அதிகரிக்கும், பொதுத்துறை வங்கிகள் மக்களின் தேவைக்கு ஏற்ப கடன்களை வழங்க வேண்டும்” என்றார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
”மேலும் ட்விட்டர் வழியே செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யலாம்”
Unicorn and Paytm | Paytm IPO-உம், மேலும் யுனிகார்ன் சார்ந்த சில தகவல்களும்..!#Paytm #Unicornhttps://t.co/VXDzPKJyvz
— ABP Nadu (@abpnadu) October 27, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion