மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான அளவுகோல் என்ன? என்பது தொடர்பாக விபரங்களை அளிக்க உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி பொதுப்பணித்துறை ஊழியர் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 2,423 வழக்குகள், வழக்குகள் நிலுவையில் உள்ளன- சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தலைவர் தரப்பிலான பதில் மனுவில் தகவல். தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த சாகுல் அமீத் மதுரை அமர்வில், "நான் பொதுப்பணித்துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது 30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக என் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. துறை ரீதியான விசாரணையில் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே எனது வழக்கை விரைந்து நடத்தி முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி, முன்பாக விசாரணைக்கு வந்தது.
"சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தலைவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் சேர்த்து 2,423 வழக்குகள், புதுச்சேரியில் 61 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஊழல் சட்டத்தின் கீழ் 8 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. நீதிபதி பரதசக்கரவர்த்தி பிரதான மாவட்ட நீதிமன்றங்களுக்கு பதிலாக கூடுதல் அமர்வு நீதிமன்றங்களை 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் ஒரு அறிக்கை அளித்தார். இந்த விஷயத்தை மாவட்ட அதிகாரம் மிக்க குழுவின் முன்பாக சமர்ப்பித்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி,
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும், சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான அளவுகோல் என்ன? என்பது தொடர்பாக விபரங்களை அளிக்க உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















