சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
மண்டல பூஜை டிசம்பர் 25 அல்லது 26? ஐயப்பன் கோவிலில் புனிதமான வழிபாடுகளின் முக்கியத்துவம் மற்றும் சடங்குகளை அறிந்து கொள்ளுங்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கோவில் நடை சென்ற நவம்பர் 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. வருடந்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும், கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் ஐயப்ப தேஸ்சம்போர்டு கடைபிடித்துள்ளதும், நாளை மறு நாள் நடைபெறும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தவர்களும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இந்த வருட மண்டல பூஜையில் கலந்துகொள்ள வருகை தருகின்றனர்.
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
மண்டல பூஜை என்பது சபரிமலை ஐயப்ப பக்தர்களின் 41 நாட்கள் விரதத்தின் கடைசி நாள் என்பதால், ஐயப்ப பக்தர்களுக்கு மண்டல பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மலையாள நாட்காட்டியின்படி மண்டல பூஜைக்கு 41 நாட்களுக்கு முன்பு அதாவது விருச்சிகம் மாசத்தின் முதல் நாளில் விரதம் தொடங்குகிறது. மண்டல பூஜை என்பது ஒரு முக்கியமான ஒரு நிகழ்வாகும், குறிப்பாக தென்னிந்தியாவில் பக்தி, ஒழுக்கம் மற்றும் ஆன்மீக இலக்குகளை அடைதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், தனுமாசத்தின் போது மண்டல பூஜை 11 அல்லது 12 வது நாளில் அனுசரிக்கப்படுகிறது. மண்டல பூஜை நாளை மறு நாள் டிசம்பர் 26ம் தேதி நாக்கிறது.
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மண்டல பூஜையின் மங்களகரமான சடங்குகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள், மலையாள நாட்காட்டியின்படி மண்டல பூஜைக்கு 41 நாட்களுக்கு முன்பு அதாவது விருச்சிகம் மாசத்தின் முதல் நாளில் நோன்பு தொடங்குகிறது. 41 நாள் காலத்தின் முடிவில், கோவில்களில் பெரிய பூஜைகளும் விழாக்களும் நடத்தப்படுகின்றன. சபரிமலையில், மண்டல பூஜையின் உச்சக்கட்டம் சிறப்புப் பிரசாதங்கள் மற்றும் புனிதப் பாடல்களைப் பாடுதல் உள்ளிட்ட விரிவான சடங்குகளுடன் குறிக்கப்படுகிறது.
மண்டல விரதம் எனப்படும் 41 நாள் கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 'மண்டலா' என்ற சொல் 41 நாட்களைக் குறிக்கிறது, இது ஆன்மீக நடைமுறைகளுக்கு புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், அவர்கள் சைவம், பிரம்மச்சரியம், வாழ்க்கைமுறையில் எளிமை மற்றும் தினசரி பிரார்த்தனைகள் உள்ளிட்ட தூய்மையின் நடைமுறைகளை கடைபிடிக்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய இரண்டும் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.