மேலும் அறிய

Pongal 2024: தை பொங்கலுக்கு முதல் நாள் ”காப்பு கட்டுவது” ஏன்? - அதன் சிறப்புகள் என்னென்ன?

தமிழர் திருநாள் தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டுதலின் சிறப்புகள் என்னென்ன? எதற்கு ”காப்பு கட்டுதல்” திருவிழாவாக கொண்டாடப்பட்டது?

முன்பிருந்த காலங்கள் முதல் தற்போது வரை பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் காப்புக்கட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த காப்புக்கட்டு திருவிழாதான் இப்போ ”போகி” பண்டிகையா மாறி இருக்குறத நாம பார்க்க முடியும். எதுக்கு காப்புக்கட்டு? என்ன காரணம்? இந்த காப்புக்கட்டு நாள் அன்று என்ன விசேஷம் அப்படின்னு பாக்குறதுக்கு முன்னாடி பொதுவா பொங்கல் பண்டிகை  கொண்டாடப்படுவது நம் மண்ணுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கிற ஒரு திருநாளாக இந்த தைப்பொங்கல் பண்டிகைய அதுவும் குறிப்பா தமிழர்கள் மட்டுமே கொண்டாடக்கூடிய ஒரு திருநாளாக இருந்துவருகிறது . இந்த பொங்கல் திரு நாளுக்கு முன் நாள் ”காப்புக்கட்டு” இந்த நிகழ்வு பாரம்பரியமாக தொன்றுதொட்டு வந்த நிலையில், தற்போது காலநிலை மற்றும் கலாச்சாரங்கள் மாற்றத்தினால் பெரிதும் இதைப் பற்றிய வரலாறு தெரியாமலே இருப்பதையும்  நாம பார்க்க முடியும். 

Pongal 2024: தை பொங்கலுக்கு முதல் நாள் ”காப்பு கட்டுவது” ஏன்? - அதன் சிறப்புகள் என்னென்ன?

”பொங்கல் கொண்டாடும் இந்த நாளுக்கு, முன் மாதங்கள்ள  மழையின் அளவு அதிகமாக இருந்தும்  பொங்கல் தொடங்கின நாள் அன்றைக்கு மழைக்காலம் தணிந்திருக்குமாம். இதுல குளிர்காலம் ஒரு பகுதியில் இருக்குமாம். இந்த இரண்டும் சேரும் போது உடலில் அதிக உஷ்ணம் சக்திகள் மாறிமாறி வெளியேறி  பெரியம்மை , காலரா போன்ற தொற்று நோய்கள்  உருவாகி இருந்த காலகட்டங்களும் இருந்ததா சொல்லப்படுது.

Pongal 2024: தை பொங்கலுக்கு முதல் நாள் ”காப்பு கட்டுவது” ஏன்? - அதன் சிறப்புகள் என்னென்ன?

மழை பெய்யுற நாட்கள்ல ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை காரணமாவும், விஷப்பூச்சிகள் போன்றதுலருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபிள்ளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு கட்டி வீட்டின் முகப்புகள்லயும் தெருக்கள்லயும் தோரணங்களா தொங்கவிடுவாங்க, இதனால் நோய் தாக்கும் பூச்சிகள் வராதுங்கற உண்மையும் இருக்கு.

தை மாத அறுவடை முடிஞ்சு விளைபொருள்கள் வீடு வந்த பின்னாடிதான் கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை .அப்படி வீட்டுக்கு வரும் விளைபொருட்கள்தான் ஒரு வருஷத்துக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருந்திருக்கு. வீட்ல இருக்க விளைபொருள் கெட்டுப் போகாம பத்திரம இருந்து அந்த வீட்டுக்குப் பயன்படனும் என்பதுக்காகதான் வீட்டுகள்ள காப்பு கட்டுவதாகவும் சொல்றாங்க தமிழாய்வாளர்கள். ‘விளை நிலங்களும் அதுல விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்யும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் கூட பாதுகாப்பா இருக்க வேணும்குற பரந்த சிந்தனையில்தான் நிலங்களையும் கால் நடை தொழுவங்களையும்கூட இதில் சேர்த்துருக்காங்க நம் முன்னோர்கள்.

Pongal 2024: தை பொங்கலுக்கு முதல் நாள் ”காப்பு கட்டுவது” ஏன்? - அதன் சிறப்புகள் என்னென்ன?

பொங்கல் காப்பு’ பத்தி அகத்திணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள்ளயே சொல்லப்பட்டிருக்கு. ‘விவசாயிக்கும் விவசாயத்துக்கும் பாதுகாப்பு’ன்னு இதைச் சொல்லிக்கலாம். இந்தப் பழக்கமும், இதுக்குச் சொல்லப்படுற காரணமும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்தும் சின்னதா வேறுபடலாம். பிழைப்புக்காக நகர்ப்புறங்களுக்குப் போனவங்ககூட எப்பாடுபட்டாவது பொங்கலுக்கு சொந்த ஊர் வந்துடறாங்க. வசிக்கும் ஊரில் பொங்கல் கொண்டாடுவதை விட, சொந்த ஊரில் இருக்கும் வீடு, நிலங்களுக்குக் காப்புக் கட்டுவதை முக்கியமானதாகக் கருதுகிறவர்களும் இருக்காங்க” என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இது போன்று நாம் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருந்து வருகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget