மேலும் அறிய
தமிழகத்தில் காவலர் தேர்வு... பாதுகாப்புப் பணிகள் தீவிரம், கனவுகளுடன் தேர்வு எழுதும் இளைஞர்கள் !
மதுரை திருப்பாலை யாதவர் பெண்கள் கல்லூரி மற்றும் நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காவலர் தேர்வு
Source : whatsapp
காரைக்குடியில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர்கள் தீயணைப்பு வீரர்கள் தகுதி எழுத்து தேர்வு 5 மையங்களில் 4300 பேர் தேர்வு எழுதுகிறார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் ஆய்வு.
சிவகங்கை தேர்வு
தமிழகத்தில் இன்று நடைபெறுகின்ற இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காவலர், தீயணைப்பு வீரர் தகுதிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தென்மாவட்டங்களில் அதிகளவு மாணவர்கள் சீருடை பணிக்கு தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரி, அழகப்பா கலை அறிவியல் கல்லூரி, மற்றும் உமையாள் ராமநாதன் பெண்கள் கல்லூரி, கம்பன் மெட்ரிகுலேஷன் பள்ளி, மகரிஷி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 5 தேர்வு மையங்களில் ஆண் 2900, பெண்கள் 1400 என மொத்தம் 4300 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தலைமையில் 3 ADSP, 5 DSP, 20 ஆய்வாளர்கள், 450 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதி
மேற்கண்ட காவலர் தகுதி தேர்வு கண்காணிப்பதற்காக சிறப்பு தணிக்கை அதிகாரியாக அருளரசு IPS கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மாணவ மாணவியர் 8.30 மணி முதல் ஒன்பது முப்பது மணிக்குள் தேர்வு எழுதும் அரங்கத்திற்குள் செல்ல வேண்டும் தேர்வு பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. முன்னதாக மாணவ மாணவியர் தீவிர சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்துக்குள் பேனா மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வேறு எந்த பொருள்களும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வு அடையாள நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) அவர்களுக்கான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் ஏதாவது ஒன்று சரிபார்க்கப்பட்டது.
காவல் ஆணையர் நேரில் ஆய்வு
அதே போல் மதுரை திருப்பாலை பகுதியில், உள்ள யாதவா கல்லூரியில் உள்ள காவலர் தேர்வுக்கான தேர்வு மையத்தினை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு சீருடை பணியாளர் மையத்தால் நடைபெறும் காவலர் தேர்வுகள் மதுரை மாவட்டத்தில் உள்ள 9 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. மதுரை திருப்பாலை யாதவர் பெண்கள் கல்லூரி மற்றும் நரிமேடு ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















