சாத்தான்குளம் கொலை குறித்து நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிய போலீஸ் வழக்கு முடித்து வைப்பு
காவலர் 3 பேரும் தனித்தனியாக இதுபோன்ற நடவடிக்கையையில் ஈடுபடவில்லை மேலும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறோம் என பிரமாண பத்திரம் தாக்கல்
![சாத்தான்குளம் கொலை குறித்து நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிய போலீஸ் வழக்கு முடித்து வைப்பு Police disparaged the Judicial Magistrate who investigated the Satankulam murder case சாத்தான்குளம் கொலை குறித்து நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிய போலீஸ் வழக்கு முடித்து வைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/12/13b40ab71741d325614ed2ee7c23fe821660284017802102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை குறித்து விசாரணை செய்ய சென்ற நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசியதாக 3 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கியது. இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை செய்யும் பொழுது அங்கு பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட ASP குமார், DSP பிராதபன் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும் நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாக பேசியதாக 3 பேர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் 3 பேரும் தனித்தனியாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மேலும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை கிழமை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் வழக்கு சரியான முறையில் நடைபெற்று வருகிறது இதுவரை 37 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருந்து விடக் கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் 3 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை செய்யலாம் என உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
நீதிமன்றம் என்பது சட்ட பரிபாலனை நடைபெறக்கூடிய இடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பி என் பிரகாஷ் கருத்து கூறினார்.
கல்குவாரி அனுமதி வழங்குவது ஆக்கிரமிப்பு அகற்றுவது சாலை அமைப்பது போன்ற பல்வேறு பொதுநல வழக்குகள் நீதிபதி பி.என் பிரகாஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம் இங்கு வந்து சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. மேலும் நீதிமன்றம் அரசின் நிர்வாக பணிகளில் விவகாரங்களிலும் தலையிட முடியாது.
இது போன்ற கோரிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம். மேலும் இதுபோன்ற பொது நல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும் மாண்பையும் கெடுக்க வேண்டாம் என நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)