மேலும் அறிய
Advertisement
மதுரை : தேவர் சிலைக்கு பல ஆண்டுகளாக மரியாதை செய்த மூதாட்டி மரணம்.. இரங்கல் தெரிவித்த மக்கள்..
மூதாட்டி பெருமாயி வயது முதிர்வு காரணமாக காலமானார் - அவரது உடலுக்கு இன்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மதுரை கோரிப்பாளையம் பகுதி மதுரையின் மையமாகவும், அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் பல்வேறு சினிமாக்களில் கூட கோரிப்பாளையம் தேவர் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படி முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலையை பராமரித்து பூஜை நடத்திவந்த மூதாட்டி பெருமாயி வயது முதிர்வு காரணமாக காலமானார் - அவரது உடலுக்கு இன்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தன்னுடைய ஏழ்மையான சூழலில் கடலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்ற காசில் பல ஆண்டுகளாக தேவர் சிலையே சுத்தம் செய்து மண்பானையில் பொங்கல் வைத்து ,தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, மதிப்புடன் பார்க்கப்பட்டவர் பெருமாயி. ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வருபவர்களை, தேவரை காணுகிற நேரத்தில் நெற்றி நிரம்ப திருநீரோடு பெருமாயி வரவேற்பார். தேவர் சிலையே சுற்றி ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து விளக்கேற்றி வைத்து மாலையிடும் பணியே தன்னார்வமாக மேற்கொண்டு பெருமாயி செய்து வந்தார்.
தேவர் குருபூஜை நடைபெறுகிற நாளில் 48 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த பணத்தில் பொங்கல் வைத்து வழிபடுவதையும் வழக்கமாக செய்வாராம். இந்நிலையில் முத்துராமலிங்க தேவரின் சிலையை பராமரித்து பூஜை நடத்திவந்த மூதாட்டி பெருமாயி வயது முதிர்வு காரணமாக காலமானார் - அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.(1/3)
— V K Sasikala (@AmmavinVazhi) October 12, 2022
இந்நிலையில் வி.கே.சசிகலா அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் அதில், ”மதுரை கோரிப்பாளையம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் திருவுருவ சிலையை பல ஆண்டுகளாக சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்து வந்த பெருமாயி அம்மாள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். ஒவ்வொரு தேவர்ஜெயந்தியின் போதும்,கோரிப்பாளையம் வைகை வடகரையில், நெற்றி நிறைய திருநீரோடு நின்றுகொண்டு தேவர் திருமகனாரை தரிசிக்க வரும்அனைவருக்கும், திலகமிடும் பெருமாயி அம்மாளை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பூசாரி பெருமாயி அம்மாளின் ஆன்மா தேவர் திருமகனாரின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion