Theni: 55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று முன்தினம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 54.95 அடியாக இருந்தது. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 60 கன அடி வீதமும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு வினாடிக்கு 40 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், நீர்மட்டம் 55 அடியை எட்டியது.
ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!
பொதுவாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதற்கட்டமாகவும், 53 அடியை எட்டியதும் 2-ம் கட்டமாகவும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். அதன்படி, நீர்மட்டம் 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சளாற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 126 கன அடியாக உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 55.81 (71)அடி
கொள்ளளவு:2849 Mcft
நீர்வரத்து: 1442 கனஅடி
வெளியேற்றம் : 69குசெக்வெசிட்டி:2511 Mcft
முல்லை பெரியாறு அணை:
நிலை- 122.75142) அடி
கொள்ளளவு:3172Mcft
வரத்து: 112 கனஅடி
வெளியேற்றம்: 112 கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை- 117.25 (126.28) அடி
கொள்ளளவு: 86.12 Mcft
நீர்வரத்து: 65.82 கனஅடி
வெளியேற்றம்: 3 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-36.19 (52.55)அடி
கொள்ளளவு:37.19Mcft
வரத்து:13 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.