மேலும் அறிய

ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!

ADMK : " திருக்கழுக்குன்றம் கூட்டத்தில், திமுகவில் இருந்த எம்ஜிஆர் பேசிய பேச்சுகள் தான் அதிமுக என்ற கட்சி துவங்க காரணமாக அமைந்தது "

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள்
 
இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்கொண்டோம் என்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக (DMK)  மற்றும் அதிமுக (Admk) இரண்டு கட்சிகள்தான் பிரதான கட்சிகளாக இருந்து வருகின்றன. இரண்டு கட்சிகள்தான், தொடர்ந்து மாறி, மாறி ஆட்சியும் செய்து வருகிறது. அதிமுக இன்று 52 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. ஜெயலலிதாவின் மரணம், அதிமுக கட்சியின் அடுத்தடுத்த பிளவு ஏற்பட்ட பிறகு கூட,  கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் பிடித்து அசத்தி இருந்தது. இந்தளவிற்கு பலமான கட்டமைப்பை கொண்டிருக்கும்,  அதிமுக  என்ற அமைப்பு  உருவாவதற்கு, ஒரு மேடைப்பேச்சு தான் காரணம் என்றால் நம்ப முடியுமா? செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில்,  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி .ஆர் பேசியதின் விளைவு தான்  அதிமுக கட்சி உருவாக காரணம். திருக்கழுக்குன்றத்தில் 52 ஆண்டுகளுக்கு முன் என்னதான் நடந்தது,  என்பது குறித்து பார்க்கலாம்.

ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!
அண்ணா - கலைஞர் - எம்ஜிஆர்
 
எம்ஜிஆர், 1953-ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை ஏற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். எம்ஜிஆர் மற்றும்  திமுக தலைவருமான, கலைஞர் கருணாநிதி இருவரும் ஆரம்ப கட்டத்தில், நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். 1960-களில் அண்ணா அவர்கள் உயிரோடு இருந்தபொழுதே, இருவருக்கு இடையே கருத்து மோதல் இருந்ததாக கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, இந்த மோதல் அதிகரித்துள்ளது. இருவருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்து வந்தனர்.

ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!
 
" கத்திரிக்காய் முத்தினால்  வண்டியில் ஏறியே ஆக வேண்டும் "

அரசியலில் இருவருக்கு மோதல் என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தே ஆக வேண்டும் அல்லவா. சமீபத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இருந்த மோதல், ஒற்றைத்தலைமையின் பொழுது உச்சகட்டத்தை அடைந்ததை போல, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கர்ஜித்தார் எம்ஜிஆர். இதுவே அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு, அவர் பேசியதுதான் புயலைக் கிளப்பியது.

ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!

அப்படி என்ன பேசினார் எம்ஜிஆர் ?
 
அமைச்சர்கள் , சட்டமன்ற மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை ஏன் திராவிட முன்னேற்ற கழகம் கேட்கக்கூடாது. ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால், அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா அதற்கு முன்னால் வந்ததா என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது,  ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான், சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு, இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன்.

 " கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன் "

மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் , தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். குடும்பத்தினர் சொத்து வாங்கி இருந்தால், எப்படி வந்தது? என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம் எனக்கூட்டத்தில் பேசியிருந்தார் .

ADMK 52 : ஒற்றைப் பொதுக்கூட்டம்..! கட்சி துவங்கிய எம்ஜிஆர்..! ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!
 
அதிரடி நீக்கம்
 
இந்த பேச்சு திமுக தலைவர்கள் இடையே, கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, செயற்குழு மூலம் எம்ஜிஆர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,  பொதுக்குழு மூலமாகவும் எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக என்ற கட்சி ஆரம்பிப்பதற்கு, திருக்கழுக்குன்றம் கூட்டம் திருப்பு முனையாக அமைந்தது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. இதன்பிறகு, எம்ஜிஆர், 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதியான இதே நாளில்தான் ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார்.

அக்கட்சியின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் இருந்தார். மக்களிடம் நேரடித் தொடர்பில் இருந்த எம்.ஜிஆரை 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றினர். அன்று முதல் மூன்று முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். இதனிடையே 1984 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்திற்கே வராமல் முதலமைச்சரானார் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் முதலமைச்சராகவே மறைந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget