மேலும் அறிய
Advertisement
பரமக்குடி: வாரச்சந்தை நுழைவு கட்டண வசூல் ஏல பிரச்சினை: கொலை மிரட்டல் விடுத்தாரா அதிமுக மாவட்ட செயலாளர்?
பரமக்குடி வாரச்சந்தை நுழைவு கட்டண வசூல் ஏலத்தில் கலந்துகொள்ளவிடாமல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அ.தி.மு.க., நகர மன்ற உறுப்பினர் தென் மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் மனு.
கூலிப்படை மூலமாக தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதால் தான் ஏலத்தில் கலந்துகொள்ள காவல்துறை பாதுகாப்புடன் ஏலம் நடைபெற வேண்டும் எனவும், திமுக ஆட்சியில் அதிமுக மாவட்ட செயலாளருக்காக நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பேட்டி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக நிர்வாகியும் ஓ.பி.எஸ்., ஆதரவாளருமான வின்சென்ட்ராஜா என்பவர் மதுரையில் உள்ள தென மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார். அதில் தான் பரமக்குடி நகராட்சியில் வார சந்தை நுழைவு கட்டணம் ஏலத்தில் கலந்துகொள்ளக் கூடாது என கூறி தலையை வெட்டி விடுவதாகவ எனக்கு தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் கொலை மிரட்டல் வந்தது இதுகுறித்து பரமக்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ததில் உயர்நீதிமன்ற மதுரை கிளை 15 மற்றும் 16ஆம் தேதி அன்று தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ஏலம் நடைபெறுவதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் அதற்கான கட்டணத்தை தன்னை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பரமக்குடி சந்தை கடை எதிரில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் முனியசாமியின் ஆதரவாளரான சுப்பிரமணி என்பவர் என்னிடம்வந்து நான் வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மீறி கலந்துகொண்டால் என்ன நடக்குமோ தெரியாது என்று மிரட்டி சென்றார். இதனைத்தொடர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ள விடாமல் தடுக்க அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி மதுரையிலிருந்து ஒரு கூலிப்படையை வரவழைத்து என்னை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று நடைபெறவிருந்த காய்கறி சந்தை கடை ஏலம் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். எனவே நான் ஏலத்தில் கலந்துகொள்ள எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், என்னை கொலை செய்ய முயன்று அச்சுறுத்திவரும் அதிமுக மாவட்டசெயலாளர் முனியசாமி மற்றும் அவருடன் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வின்சென்ட் ராஜா..,”பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை நுழைவு கட்டண ஏலத்தில் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தரப்பினர் பல ஆண்டுகளாக ஏலம் எடுத்த வருகிறார்கள். இந்த நிலையில் தான் ஏலம் எடுப்பதை தடுக்கும் வகையிலும் தனக்கு முனியசாமி தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் மேலும் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் எனவே காவல்துறை தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இதுபோன்று தனக்கு கொலை மிரட்டல் எடுக்கக்கூடிய அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் அதிமுக மாவட்ட செயலாளருக்காக நகராட்சி நிர்வாகம் டெண்டர் தேதியை மாற்றுகிறது எனவும், பரமக்குடி வாரச்சந்தை நுழைவுகட்டண ஏலத்தை முனியசாமி தரப்பு தொடர்ந்து குறைவான தொகைக்கு எடுத்துவருவதாகவும் குற்றம்சாட்டினார் வின்சென்ட் ராஜா முன்னாள் நகர் மன்ற உறுப்பினர், அதிமுக நிர்வாகி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion