மேலும் அறிய
Advertisement
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு: விடுதலையை ரத்து செய்ய கோரி மனு
மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு முன் விடுதலை செய்ய பட்டவர்களின் விடுதலையை ரத்து செய்ய கோரி கொலையான முருகன் மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல்.
மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பஞ்சாயத்து
தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் கடந்தாண்டு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணை செய்து விடுதலையான 13 நபரும் மதுரை மாவட்டத்தை விட்டு வெளியேறி வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
தற்போது இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சிறப்பு அமர்வு விசாரணை செய்து வருகின்றது இந்த அமர்வில் 13அவர்களுக்கும் விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது..
இந்நிலையில்13 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கொலையான முருகேசனின் மனைவி மணிமேகலை, ராஜாவின் மனைவி வசந்தி, சேவுகமூர்த்தியின் மனைவி காளி, மூக்கனின் மனைவி பச்சையம்மாள், பூபதியின் தாய் காட்டாச்சி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.
அதில், 13 பேரை முன்கூட்டியே விடுவிப்பதற்காக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் அரசாரணையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டதில் பலருக்கு வேறு சில வழக்குகளிலும் தொடர்பு உள்ளது எனவே முன்கூட்டி விடுதலை செய்ததை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் விடுதலை ஆனவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion