பழனி கோயிலில் அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்; புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் ரகசிய யாகம்
பழனி கோயிலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் நடைபெற்ற ரகசிய யாகத்தில் பங்கேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். பழனி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்த இணையமைச்சர் எல்.முருகன் பழனி புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்துகொண்டார். நேற்று முதல் நடைபெற்றுவரும் இந்த யாகத்தில் நேற்று மாலையில் மத்திய இணைஅமைச்சர் முருகன் கலந்துகொண்டார். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்துவரும் யாகத்தில் இன்றும் அமைச்சர் கலந்துகொண்டார்.
crime: தோட்டத்தில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை - நத்தம் அருகே பரபரப்பு
யாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பாஜகவினர் சிலரை தவிர பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து ஆதின நிர்வாகத்தினரிடம் கேடட் போது :- மகா சண்டியாகம் நடத்தப்படுவதாகவும், இதில் அமைச்சர் முருகன் மற்றும் சில பாஜகவினர் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், மேலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கவில்லை என்றும், யாகத்தில் பங்கேற்க மட்டுமே தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
"கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை
பழனி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மகா சண்டியாகம் நடத்தப்படுவதும், அதில் மத்திய இணை அமைச்சர் ரகசியமாக பங்கேற்பதும், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்திருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Rajinikanth Watch ARR Movie: இயக்குநர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ஆர்.. படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த்!
சில மாதங்களுக்கு முன்பு முதல்வரின் குடும்பத்தினர் திருச்செந்தூரில் பொதுமக்களை அனுமதிக்காமல் யாகம் நடத்தியதாக குற்றம்சாட்டு எழுந்து அதை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவர் பொதுமக்கள் அதிகம் வந்து வழிபடும் புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் ரகசிய யாகம் நடத்தி, அதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அமைச்சர் மட்டும் பங்கேற்றிருப்பது மட்டும் சரியா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்