பழனி முருகன் கோயில் கிரிவல பாதையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆய்வு
பழனி அருள்மிகு தண்டாயுதபானி முருகன் கோயில் கிரிவல பாதையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அடிவாரம் , கிரிவீதி , சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர், கோயில் இணை ஆணையர், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Erode Building Collapse: ஈரோட்டில் கட்டடம் இடிந்து பணியாளர் உயிரிழப்பு
2018 ஆம் ஆண்டு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மூன்று தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் பழனி அடிவாரம் கிரிவல பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்பட வேண்டும் , ஜனவரி ஒன்பதாம் தேதி அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Pongal 2024 Rasi Palan: தை பொங்கல் முதல் அமோகம்! 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்?
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் அடிவாரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தேவஸ்தான அதிகாரிகள் காவல்துறையினர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவினர் பழனி அடிவாரம் கிரிவல பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின்னர் திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில் பக்தர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் எனவும் ஆக்கிரப்பு கடைகள் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்து பின்னர் நீதிமன்றத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.