Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
Incentive For Rural School Girls: கல்விக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 500 முதல் ரூ.100 ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கல்விக்கான திட்டங்கள்
தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி தான் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் படிக்கட்டாக உள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கு கல்வி கிடைக்க பல்வேறு சலுகைகளையும் திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் படி மாணவர்கள் வருகையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பேருந்து பயண அட்டை, இலவச மிதிவண்டி, புத்தம், புத்தக பை என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியிலும் கணினி மற்றும் ஆய்வக வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
இதே போல அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியின் போது மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என பல சலுகைகளும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கிராம்புறங்களில் மாணவிகளின் கல்வி விகிதத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இந்தாண்டிற்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.500 முதல் ரூ.1000 ஊக்கத்தொகை
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாங்கமயினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கிராமப்புற பள்ளி மாணவியருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பு முதல் 5 வரை மாணவியருக்கு ரூ. 500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 1000 வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தகுதிகள்:
பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில்பவராக இருக்க வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
அணுகவேண்டிய அலுவலர்
சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.





















