Jana Nayagan Audio Launch Live: ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன்... போங்க பேசிய விஜய்
Jana Nayagan Audio Launch LIVE Updates: ஜனநாயகன் விஜய்யின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
LIVE

Background
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் இடம் பெற்றிருக்கிறார். இவர்களை தவிர மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபோ மோனிகா ஜான் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஜனநாயகன் படம் பொங்கல் வெளியீடாக 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் அரசியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட உள்ளார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச திறந்தவெளி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக விஜய்யின் பெற்றோர்கள், நடிகர்கள் நாசர், இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட பலரும் மலேசியா சென்றுள்ளனர். அதேபோல் பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா, க்ரிஷ், அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண் போன்றோரும் மலேசியாவில் நடைபெறும் இசை வெளியிட்டு விழாவில் பாட உள்ளனர். விஜய்யின் கடைசி சினிமா நிகழ்ச்சி என்பதால் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
Jana Nayagan Audio Launch Live: கில்லி காலத்திலிருந்தே சிறந்த கெமிஸ்ட்ரி
பொதுவாக, சிறந்த கெமிஸ்ட்ரி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையேதான் இருக்கும். ஆனால் எனக்கு, அது கில்லி காலத்திலிருந்தே பிரகாஷ் ராஜ் சாருடன் எப்போதும் இருந்து வருகிறது. நன்றி, பிரகாஷ் ராஜ் சார்.
Jana Nayagan Audio Launch Live: மாளிகையை கொடுத்த ரசிகர்கள்
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது, இந்தத் துறையில் ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையைக் கொடுத்திருக்கிறீர்கள்





















