மேலும் அறிய

Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

திண்டுக்கல் மாவட்டம் பழனி  மலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூன்றாவது நாளாக எண்ணப்பட்டதில் மொத்த வருவாய் 7 கோடி ரூபாயை தாண்டியது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 1, 2-ந் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து 4-ந் தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதன்பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில், துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஒவ்வொரு உண்டியல்களாக திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில் நாணயங்களை எந்திரம் மூலம் பிரிக்கும் பணி நடந்தது. அதன்பின்னர் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதன் மூலம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 479 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 401 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 264 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 5 கிலோ 820 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

இதனைத் தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை, நேற்று புதன்கிழமை எண்ணப்பட்டதில் ரொக்கமாக 5 கோடியே  9 லட்சத்து 80 ஆயிரத்து  479 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும், தங்கம் 894 கிராமும், வெள்ளி 29 ஆயிரத்து 417 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2372 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கைகள் மூன்றாவது நாளாக ரொக்கமாக 7 கோடியே  17 லட்சத்து 42 ஆயிரத்து  126 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது.

Palani Temple: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - மொத்த வசூல் இவ்வளவா..?

மேலும் தங்கம் 1 கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ ஆயிரத்து 277 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நிறைவுபெற்றதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Rasipalan December 16: பிறந்தது மார்கழி! 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போது இந்த நாள் - இன்றைய ராசி பலன்!
Rasipalan December 16: பிறந்தது மார்கழி! 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போது இந்த நாள் - இன்றைய ராசி பலன்!
Embed widget