நாளை மறுநாள் முதல் 18ஆம் தேதி வரை பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளதால். ஊரடங்கு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வழிபாட்டு தலங்களுக்கும் முக்கிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் கட்டுப்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிக்கை வாயிலாக விடுத்துள்ளார். இந்த அறிக்கையில் பழனி முருகன் கோயிலில் இன்று முதல் வருகிற 21-ஆம் தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்தப்பட உள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்