பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாளை டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்பே பக்தர்கள் அனுமதி.
நாளை டிசம்பர் 6 ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...! பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் மாலையில் பங்கேற்பு..!
குறிப்பாக மலைக்கோயிலில் தங்ககோபுரம், ராஜகோபுரம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது பழனி முருகன் கோயிலில் கும்பாபிேஷக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
12 PM Headlines: மதியம் 12 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்ன..?
அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்கின்றனர். கோயில், அடிவார பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் ஒருவர் கூறுகையில், தற்போது சபரிமலை சீசன் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி உள்ளதால் பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயில், அடிவாரம் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கோயில் மற்றும் அடிவாரம் பகுதியில் ரோந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமரா மூலம் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்